மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் இனி வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்! மாநகராட்சி ஆணையர் உத்தரவு..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இந்நோயால் 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இனி வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவை பிறப்பித்துள்ளார். அப்படி முககவசம் அணியாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.