மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... தங்கம் விலை குறைப்பு... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய நாள் முதல் தங்கத்தின் விலை பெருமளவில் உயர்ந்து வந்தது. மேலும் இந்த வாரம் துவக்கத்தில் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று வெகுவாக சரிந்துள்ளது.
அதாவது சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.25 குறைந்து ரூ.4837க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 38,696 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் வெள்ளியின் விலையும் கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.80-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,800 விற்பனை செய்யப்படுகிறது.