மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா எதிரொலி: தமிழக அரசின் புதிய திட்டம்.. நாளை முதல் ரேசன் கடைகளில் இலவச மாஸ்க் விநியோகம்..
தமிழகத்தில் ரேசன் கடைக்களில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடிக்கும் அதிகமான ரேசன் அட்டை குடும்பத்தாரர்கள் உள்ளனர். ஒவ்வொரு ரேசன் அட்டைக்காரருக்கு தலா இரண்டு முககவசம் என்ற விதத்தில் பருத்தியிலான முககவசம் வழங்க தமிழக அரசு புதிய திட்டத்தை அமல்ப்படுத்தியுள்ளது.
தலையின் பின்புறம் கட்டிக்கொள்வது போல், தயாரிக்கப்பட்டுள்ள இந்த முகக் கவசங்கள், தரமான பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முககவசத்தை துவைத்து மீண்டும் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
மேலும் தமிழக அரசின் இலவச முககவசம் வழங்கும் திட்டத்தை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அதன்படி சென்னை மாநகராட்சியை தவிர மற்ற பகுதி மக்களுக்கு நாளை முதல் இலவச மாஸ்க் நியாய விலைக் கடைகளில் தரவுள்ளனர்.