கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் இவர் தான்.! வெளியான தகவல்
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இதனையடுத்து தற்போது மீட்கப்பட்ட அந்த நபர் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் அவர்களுடன் பயணித்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண்சிங் மட்டும் உயிர் தப்பினார். அவர் 80 சதவீத தீக்காயங்களுடன் குன்னூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வரும் பட்சத்தில் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். இதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது சௌர்யா சக்கரம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு வானில் அவசர சூழலில் தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.