மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கான்ஸ், குட்கா கடத்தி பறக்கும் படையிடம் சிக்கிய பாஜக நிர்வாகி கைது.. திருச்சியில் சம்பவம்.!
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்த சென்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர், ஓ. கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரின் மகன் செந்தில் குமார் (வயது 38). செந்தில் குமார் திருச்சி புறநகர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். பெட்டிக்கடையும் சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று துறையூர் பாலக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த செந்தில்குமாரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ ஹான்ஸ், 860 கிராம் பாண் மசாலா, 450 கிராம் புகையிலை பாக்கெட் போன்றவை இருந்தது. இதனையடுத்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், செந்தில் குமாரை துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். துறையூர் காவல் துறையினர் செந்தில் குமாரை வழக்குப்பதிந்து கைது செய்தனர்.