மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவேரி ஆற்றின் அழகை ரசிக்க வந்த கல்லூரி மாணவர் கொடூர கொலை; போதை கும்பல் வெறிச்செயல்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியை சேர்ந்தவர் ராஜா கண்ணன். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது திருச்சி காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அதனை பார்க்க உள்ளூர் மக்கள் முதல் வெளியூர் நபர்கள் வரை பலரும் திருச்சி காவேரி ஆற்றில் திரண்டு ஆற்றின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர். அந்த வகையில், ராஜா தனது நண்பர்களுடன் காவேரி ஆற்றுக்கு சென்றுள்ளார்.
கல்லூரி மாணவர் கொடூர கொலை
அங்கு கஞ்சா மற்றும் மதுபோதையில் இருந்த கும்பல், ராஜாவிடம் எங்கிருந்து வருகிறாய் என வம்பிழுத்து இருக்கிறது. அப்போது அவர்களுக்கு பதில் அளித்த ராஜாவை, வெளியூர்காரனுக்கு இங்கு என்ன வேலை? என கேட்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனைக்கு மறுப்பு தெரிவித்த ஏசி மெக்கானிக் கொடூர கொலை; கஞ்சா வியாபாரி கும்பல் பகீர் செயல்.!
இந்த சம்பவத்தில் ராஜா கண்ணன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட, தகவல் அறிந்த காவல்துறையினர், ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் 2 சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வக்கீல் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு கொலை.. இதுதான் காரணமா?.. நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்.!