சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
டி.டி.வி.தினகரனுக்கு நிரந்தர வெற்றியா?? இன்று வெளியாகவிருக்கும் அதிரடி தீர்ப்பு!!
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுற்றது. இதனையடுத்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. எனவே தனக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்த குக்கர் சினத்தை நிரந்தர சின்னமாக்க அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முடிவு செய்தார். இதனையடுத்து இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில்,டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என கூறினார்கள்.
அ.ம.மு.க அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும், பொதுப்பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.