துணை முதல்வரின் மகனுக்கு இடம் கொடுத்ததாக சர்ச்சை.. சமூக வலைத்தளங்களில் தொடரும் வாதம்.!



UDhayanidhi Stalin Inbanidhi Issue 

 

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விமர்சையாக நடைபெற்றது. 1000 காளைகளும், 900 காளையர்களும் போட்டியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து இருந்தனர். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கொடியசைத்து வைத்து நிகழ்ச்சியை தொடங்கி இருந்தார். 

இதையும் படிங்க: "ஆளுநருக்கு சட்டப்பேரவையில் வாக்கிங் செல்வது தான் ஒரே வேலை" - துணை முதல்வர் உதயநிதி கலாய்.!

அப்போது, இன்பநிதியுடன் அவர்களின் நபர்களும் வந்திருந்த நிலையில், அவர்களுக்காக மாவட்ட முதல்வர் எழுந்து இடம் கொடுத்ததாகவும், அமைச்சர் மூர்த்தி இன்பநிதி அமர வேண்டி ஆட்சியரை எழுந்து செல்ல அறிவுறுத்தியதாகவும் சர்ச்சை கருத்துக்களுடன் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. 

இதனிடையே, இந்த விசயத்திற்கு விளக்கம் அளித்துள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, "துணை முதல்வர் தனது இருக்கையில் இருந்து எழுந்து நிற்கும்போது, விதியின்படி மாவட்ட ஆட்சியர் என்ற உரையில் எழுந்து நின்றேன். இந்த விஷயத்தை பலரும் திரித்து பரப்பி வருகிறார்கள். இவ்வாறான சர்ச்சை செயலை செய்ய வேண்டாம்" என தெரிவித்தார். 

இதையும் படிங்க: #Breaking: கருணைக்கே தகுதி இல்லாதவர்கள் - ஜாமின் கேட்ட கேடி அதிகாரிகளை வறுத்தெடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.!