#Breaking: கருணைக்கே தகுதி இல்லாதவர்கள் - ஜாமின் கேட்ட கேடி அதிகாரிகளை வறுத்தெடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.!



in Chennai HIgh Court Avoid Bail 

 

சென்னையில் தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 இலட்சம் பறிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த முகமது கெளஸ் என்பவரை கடத்தி ரூ.20 இலட்சம் பறித்த விவகாரத்தில், காவல் துறையினர் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடந்த விசாரணையில், ஹவாலா பணம் எடுத்து வருவோரை குறிவைத்து பல மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதும், தனக்கு கிடைக்கும் ராஜாங்க ரீதியிலான தகவலை தெரிந்துகொண்டு, சட்டவிரோத செயலை அரங்கேற்றியது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடக்கிறது.

இதையும் படிங்க: #Breaking: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை; இன்று கிடுகிடு உயர்வு., நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

chennai

தகுதியே இல்லாதவர்கள்

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நால்வரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அப்போது, விசாரணையை ஏற்ற நீதிபதிகள், ரூ.20 இலட்சம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில், வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் கருணைக்கு தகுதி இல்லாதவர்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்க எந்த முகாந்திரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

இதையும் படிங்க: "எரிச்சி கொன்னுட்டோம்" - 7 ஆண்டுகளாக மாயமானவர் வழக்கில் பகீர் திருப்பம்; பரபரப்பை வைக்கும் தகவல்.!