திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை! 5 பேருக்கு தண்டனை குறைப்பு!
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று சமூகத்தை சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.
இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்த வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தது. மேலும் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, உறவினா் பாண்டிதுரை, பிரசன்னா ஆகிய 3 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அங்கு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
அதில், உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைத்தும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சமி விடுதலை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.