மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழ்க ஆயில் வாங்குனா இப்படியொரு பெனிபிட் ஆ?.. சிங்கில்-களே மளிகைக்கடைக்கு படையெடுங்கடா..!
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விளம்பரம், விளம்பர யுக்தி என வேண்டாத பொருளையும் எண்ணிப்பார்க்க வைப்பது விளம்பரத்தால் மட்டுமே சாத்தியம். அன்றைய பொருட்களில் உள்ள தரத்தின் அடிப்படையில் விளம்பரம் செய்யப்பட்டது. இன்றோ அதிகாரிகள் அலட்சியம், ஊழல், மேலிட பிரச்சனை என விளம்பர யுக்தியும் கேட்பாரற்று இருக்கிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வாழ்க ஆயில் என்ற காணொளி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "மளிகைக்கடையில் நின்றுகொண்டு இருக்கும் ஆணொருவர் கடலை எண்ணெய் வாழ்க ஆயில் கொடுங்கள் என்று கேட்க, அருகே மற்றொரு பொருள் வாங்க வந்த பெண்மணி உங்களின் வீட்டிலும் வாழ்க ஆயில் வாங்குவீர்களா? என்று தயங்கி கேட்கிறார்.
அவரோ ஆம் என்று கூற, பெண் வாழ்க ஆயில் உபயோகம் செய்பவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பதை போல பேசிவிட்டு, அவரின் அலைபேசி எண்ணை கேட்டு பெறுகிறது. இதனைக்கண்ட 90 கிட்ஸோ வாங்க எல்லாரும் மளிகைக்கடைக்கு சென்று வாழ்க ஆயில் வாங்குவோம் என்று கலாய்த்து வருகின்றனர்.
வாழ்க ஆயில் பல வருடமாக மக்களால் உபயோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் விளம்பரம் நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.