அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு; இன்ஸ்டா ரீல்ஸ் பகீர்.. சக மாணவிகள் அதிர்ச்சி செயல்.!



Vellore Katpadi Govt School Students Baby Shower Reels 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணாக்கர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என தடை இருக்கிறது. 

இதனிடையே, திருட்டுத்தனமாக எடுத்து வரப்படும் செல்போனை கொண்டு, சில மாணவிகள் அவ்வப்போது வீடியோ பதிவு செய்து வந்ததாக தெரியவருகிறது. இதனிடையே, காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. 

இதையும் படிங்க: பெண்களின் ஆடைகள் டார்கெட்.. நள்ளிரவில் அதிர்ச்சி தந்த ஆசாமி; சிசிடிவியால் அம்பலமான உண்மை.!

வைரல் வீடியோ

அதாவது, திருட்டுத்தனமாக எடுத்து வரப்பட்ட செல்போனை கொண்டு, மாணவிகள் ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாணவிகள் உணவு இடைவேளையின்போது, சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இந்த அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமாவிடம் விசாரணை நடத்தியுள்ளார். அதன்பேரில் மாணவிகளின் பெற்றோரை அழைத்து, அவர்கள் முன்னிலையில் மாணவிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 19 அன்று நடந்ததாக தெரியவரும் நிலையில், மேற்படி விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: வேலூர்: 16 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; விசாரணைக்கு பயந்து 23 வயது காதலன் தற்கொலை.!