வேலூர் பெண் மருத்துவர் கூட்டுப்பாலியல் பலாத்கார விவகாரம்; 20 ஆண்டுகள் சிறை தண்டனை.!



Vellore Katpadi HOspital Doctor Rape Case Judgement 18 Feb 2025 


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சிஎம்சி மருத்துவமனையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2022 மார்ச் 16 அன்று, காட்பாடியில் திரைப்படத்திற்கு சென்றுவிட்டு, நாக்பூரை சேர்ந்த ஆண் மருத்துவரான நண்பருடன் வந்துகொண்டு இருந்தார். 

அப்போது, வழியில் ஐந்து பேர் கும்பல் இருவரையும் தாக்கி, வேலூரில் உள்ள பாலாறு பகுதிக்கு கடத்தி சென்றனர். ரூ.40000 பணம், 2 சவரன் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்த கும்பல், பெண் மருத்துவரை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்தனர். 

vellore

நீதிமன்றத்தில் விசாரணை

வேலூர் வடக்கு காவல்துறையினர் சத்துவாச்சேரி வ.உ.சி நகரில் வசித்து வரும் பார்த்தீபன், கூலித் தொழிலாளிகள் மணிகண்டன், பரத், சந்தோஷ், 17 வயது சிறுவன் என 5 பேர் கும்பலை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதிகள் மகேஸ்வரி பானு ரேகா தலைமையில் விசாரணை நடைபெற்றது. 

இதையும் படிங்க: #Breaking: இரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. தமிழ்நாடு முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விசாரணையைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிறுவனுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதையும் படிங்க: காதலர்களுடன் ஒதுங்கும் ஜோடிகள் டார்கெட்.. அண்ணா பல்கலை.,யை மிஞ்சும் வேலூர் கொடூரம்..! பகீர் தகவல் அம்பலம்.!