ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
காதலர்களுடன் ஒதுங்கும் ஜோடிகள் டார்கெட்.. அண்ணா பல்கலை.,யை மிஞ்சும் வேலூர் கொடூரம்..! பகீர் தகவல் அம்பலம்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சேரி பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடி, சம்பவத்தன்று புதுவசூர் தீர்த்தகிரி மலை பகுதிக்கு சென்றனர். அப்போது, வழிப்பறி கொள்ளையர்கள் இரண்டு பேர், காதல் ஜோடியை மிரட்டி நகை, பணம் பறித்துள்ளனர்.
இந்த சர்ச்சை செயலை குற்றவாளிகள் தொடர்ந்து செய்து வந்த நிலையில், ஒருசிலர் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்ததால் புகார் அளிக்கவில்லை. சமீபத்தில் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பல புகார்கள் எழுத்து வாயிலாகவும், வாய்மொழியாக தெரிவித்தும் பலனில்லை.
இதையும் படிங்க: #Breaking: ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண் பலாத்கார முயற்சி; 4 மாத சிசு உயிரிழப்பு..!
ஆடியோவை கீழுள்ள இணைப்பில் கேட்கவும்
"பொண்ணு சரியா இருக்குபா...சிகப்பா"காதல் ஜோடிகளே இவர்கள் டார்கெட்..ஹாட்பிட்டயே ரைஸ்ஸாக வைக்கும் ஆடியோ#Vellore | #PudhuVasoor | #Kutrasarithiram | #ThanthiTV pic.twitter.com/tY1OGL4sSG
— Thanthi TV (@ThanthiTV) February 7, 2025
2 பேர் கும்பல் கைது
இதனால் காவலர்கள் திருட்டு கும்பலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என கண்டனங்கள் எழுந்தது. மேலும், குற்றவாளிகள் காதல் ஜோடி குறித்து பேசும் ஆடியோ வெளியாகி வைரலாகியது.
இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல்துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்ட மூலக்கொள்ளை அய்யனார் (46), விநாயகம் (60) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தனிப்படை காவல்துறையினர் அய்யனாரின் வீட்டில் இருந்து ஜெலட்டின் எனப்படும் வெடிமருந்து குச்சிகளையும் கைப்பற்றி இருக்கின்றனர்.
தனியாக காதலர்களுடன் வரும் ஜோடிகளை குறிவைத்து, அவர்களை ஆபாசமாக பேசி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயல் தொடர்ந்து இருக்கிறது.
வீடியோ நன்றிதந்தி டிவி
இதையும் படிங்க: வேலூர்: இரயில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; குற்றவாளி கழிவறையில் வழுக்கியதால் எலும்பு முறிவு.!