மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 படமும் எனக்குதான்!. நடிக்க மாட்டேன்னு தான் சொன்னேன், அடிக்க மாட்டேன்னு சொன்னேனா?!: விஜய், அஜீத்தை தட்டி தூக்கிய உதயநிதி..!
விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் "வாரிசு" திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள வாரிசு படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், இந்த படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதியை சந்தித்து பேச இருக்கிறேன் என கூறியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் வாரிசு திரைப்படத்தை சென்னை,செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அஜித் நடிக்கும் "துணிவு" திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.