பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கொரோனா சமயத்தில் இதனை செய்த ஒரே அமைச்சர் நான் தான்.! பிரச்சாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்.!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்காக அவரின் 9 வயது மகள் அனன்யா பிரச்சாரம் செய்தபோது, மக்களுக்கு ஏதாச்சும் ஆகிருச்சுன்னா எங்க அப்பா துடிச்சிப்போயிடுவாரு. உங்களுக்கு காது கேக்கலைன்னா காது மெஷினா வருவாரு. கண்ணு தெரியலைன்னா கண்ணாடியா வருவாரு. கஜா புயல்னா கரன்ட்டா வருவாரு. கொரோனான்னா மருந்து, மாத்திரையா வருவாரு. பொங்கல்னா சீரா, சிறப்பா வருவாரு என பேசிய வீடியோ வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த முறை விராலிமலை தொகுதி மக்கள் போட்ட வாக்குகளால் விஜயபாஸ்கர் என்ற ஒத்த உயிர் கொரோனா காலகட்டத்தில் உலகமே அஞ்சி நின்ற போது களத்தில் நின்று பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற உதவியது. என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை விராலிமலை தொகுதிக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன்.
கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளை கொரோனா வார்டிற்குள்ளேயே சென்று பார்த்து விசாரித்த ஒரே அமைச்சர் நான். என்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் இந்த தொகுதி மக்கள் நலன்களுக்காக பாடுபடுவேன் என பேசியுள்ளார்.