திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சக காவலரின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த காவலர்.. பகீர் செயலால் பேரதிர்ச்சி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி அருகே மொட்டமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 11 ஆவது பட்டாலியன் காவலர் குடியிருப்பானது அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடபுரத்தை சேர்ந்த காவல் அதிகாரி சேகர் தங்கி இருக்கிறார்.
இவருடன், சேகரின் மனைவியான வீரலட்சுமியும் (வயது 27) வசித்து வருகிறார். இதே குடியிருப்பில் உள்ள வீட்டில், காவல் அதிகாரியான மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஆனந்த் (வயது 38) என்பவர் குடியிருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று வீரலட்சுமி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, காவல் அதிகாரி ஆனந்த் வீரலட்சுமி குளிப்பதை வீடியோ எடுத்து, அவரை பாலியல் இச்சைக்கு இணங்க கூறி மிரட்டியதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக வீரலட்சுமி வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.