மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண் தான் எங்களை பாலியல் துன்புறுத்தல் செய்தார்.! விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பம்.!
விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் நான்கு சிறுவர்கள் என எட்டு பேர் கடந்த மார்ச் 19ல் கைது செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வரும் இவ்வழக்கில், மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறார்களும் ஜாமினில் வெளிவந்தனர்.
அவர்களில் ஒருவர், பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எங்கள் தெருவில் குடியிருக்கும் ஹரிஹரன் என்ற அண்ணன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை, அந்த இளம்பெண் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக அழைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார்.
இதுகுறித்து வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, எங்களை மிரட்டினார். இதனால் எங்கள் வீட்டுக்கு தெரியாமல் அந்த பெண்ணிற்கு பணத்தையும் கொடுத்துள்ளோம். போலீசார், எங்களை கைது செய்தபோது விபரத்தை கூறினேன். மேலும். இளம்பெண் மொபைல் போனை பார்த்தால் உண்மை தெரியும் என்று கூறினேன். ஆனால், போலீசார் எங்களை கைது செய்தனர். என்னை கட்டாயப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்த இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.