கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது; தஞ்சாவூர், டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.



water openned from Kallanai

தஞ்சாவூர், காவிரி டெல்டா மாவட்ட சம்பா சாகுபடி பாசனத்திற்காக இன்று(22ம் தேதி) கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19ம் தேதி சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு கல்லணையை வந்தடைந்து. தொடர்ந்து டெல்டா மாவட்ட பாசனத்திறக்காக இன்று காலை 11 மணிக்கு, அணையை ஒட்டி அமைந்துள்ள விநாயகர், ஆஞ்சநேயர் கோவில்களில் மேளதாளம் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் காமராஜ், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் மணியன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் எம்.பி., வைத்திலிங்கம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாகை, திருச்சி, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள், விவசாயிகள், பொதுபணித்துறை அதிகாரிகள் ஆகியோர் கல்லணையில் மலர் துாவி அணையை திறந்தனர். 

kallanai

 

காவரியில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியும், வெண்ணாற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியும், கல்லணை கல்வாயில் வினாடிக்கு 1000 கனஅடியும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டள்ளது. இதன் மூலம் சம்பா மற்றும் தளாடியாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் கடலுார் என சுமார் 12 லட்சம் ஏக்கர் பரபரப்பளவு பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.