மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையின் வறட்சியைப் போக்க 65 கோடி ரூபாய் செலவில் பலே திட்டம்! மக்கள் உற்சாகம்
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே நிலவிவரும் கடும் வறட்சியை போக்க தமிழக அரசு கடந்த மாதம் 65 கோடி ரூபாய் செலவில் திட்டமொன்றை செயல்படுத்த முடிவு செய்தது. இந்தத் திட்டமானது ரயில் மூலம் குடிநீரை வினியோகம் செய்வது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து பனிரெண்டு பெட்டிகளைக் கொண்ட ரயிலில் சென்னைக்கு தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 50 ஆயிரம் லிட்டர் நீர் நிரப்பப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் இருந்து மேட்டுசக்கர குப்பத்தில் உள்ள தரை மட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3.5 கிலோமீட்டர் தூரம் ராட்சத பைப் லைன் அமைக்கப்பட்டது. அங்குகிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள குழாய்கள் மூலம் ரயில்வே பெட்டிகளில் தண்ணீரை நிரப்பினர்.
இந்த ரயிலின் பயணம் நேற்று இரவு துவங்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில கோளாறுகளால் காலதாமதம் ஏற்பட்டு முதல் முறையாக இன்று காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டது. தற்போதைக்கு இதேபோல் தினமும் ஒருமுறை தண்ணீர் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் இது அதிகரிக்கப்படலாம். இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை தீரும் என மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.