பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
சாத்தான்குளம் விவகாரம்! அந்த இரவில் காவல்நிலையத்தில் நடந்தது என்ன?
காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை தெரிவிக்கிறது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு இது தொடர்பாக அறிக்கை சமர்பித்திருந்தார். அதில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், ஜெயராஜையும் பென்னிக்ஸையும் லத்தியால் விடிய விடிய அடித்ததும், இது நேரடி சாட்சியின் வாக்குமூலம் மூலம் தெரியவந்தது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார். மேலும் பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.