மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊருவிட்டு ஊருவந்து வம்பு தும்பு பண்ணாதீங்கோ! : சுற்றுலாவுக்கு வந்த குடிகாரர்களுக்கு நேர்ந்த சம்பவம்..!
புதுச்சேரி, மூலக்குளம் பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் சேர்ந்து ஏற்காடு பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். இவர்கள் ஏற்காடு அருகே உள்ள ஜெரினாகாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அந்த விடுதியில் ஏற்கனவே, கோவையை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் தங்கி இருந்தனர்.
நேற்று இரவு புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்வதாக, மற்றொரு அறையில் தங்கியிருந்த கோவையை சேர்ந்த குடும்பத்தினர் விடுதி ஊழியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் தங்கும் விடுதி ஊழியர் துரைசாமி புதுவை வாலிபர்களை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைசாமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர், தனது நண்பர்களான பிரமோத்குமார் (28), பாபு (27), சுரேஷ்குமார் (25), நவீன் குமார் (19), பிரவீன் (26) மற்றும் அரவிந்த் குமார் (23), ஆகியோரை அழைத்து தான் தாக்கப்பட்டது குறித்து கூறியுள்ளார். இதனால் அவர்கள் விடுதிக்கு விரைந்து வந்து புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் பிரேம், மற்றும் பரசுராம், விஜய்சங்கர் ஆகியேரை தாக்கியதுடன், அவர்கள் வந்த காரையும் சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த தகராறில் அந்த விடுதி போர்க்களம் போல மாறியது. இதில் காயம் அடைந்த இருதரப்பினரும் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஏற்காடு காவல்துறையினர், இருதரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த மோதல் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.