மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார கணவனை தோசை கரண்டியால் அடித்து கொலை செய்த மனைவி கைது..!!
கணவரை தோசைக் கரண்டியால் அடித்து கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூரில் உள்ள செந்தில் நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (43). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 22 ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் ரவிக்குமார் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
மறுநாள் இறுதி சடங்கு செய்யும் போது, ரவிக்குமாரின் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்த உறவினர்கள், திருமுருகன்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.அதன்பின்னர், ரவிக்குமாரின் உடலை, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அறிக்கையில், ரவிக்குமார் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்துறையினர் மனைவி ஜோதிமணியை கைது செய்தனர். மதுபோதைக்கு அடிமையான ரவிக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குடித்து விட்டு வந்து போதையில், மனைவி ஜோதிமணியின் கை, கால்களில் தோசைக்கரண்டியால் சூடு வைப்பது, கட்டையால் அடிப்பது எனறு சித்ரவதை செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, 22 ஆம் தேதி வங்கியில் நகையை அடகு வைத்து, பணம் வாங்கிய ரவிக்குமார், அதில், 4,000 ரூபாய்க்கு மது குடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜோதிமணி, தோசை கரண்டியால், ரவிக்குமாரை சரமாரியாக அடித்துள்ளார். இதில், ரவிக்குமார் இறந்து விட்டதால், உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.