சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
மது போதையில் தகராறு செய்த கணவன்.. துடிதுடிக்க மனைவி செய்த செயல்.!

மது போதையில் தகராறு செய்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த வழக்கில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் குப்பாயிவலசையை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவரது மனைவி பொன்னாத்தாள். இதில் மது போதைக்கு அடிமையான செல்லமுத்து குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி செல்லமுத்து குடித்துவிட்டு மது போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றவே மனைவியை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொன்னாத்தாள் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்லமுத்து அலறி துடித்துள்ளார்.
செல்லமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொன்னாத்தாளை கைது செய்தனர்.