திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மது போதையில் டார்ச்சர் செய்த கணவன்.. ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்.!
நீலகிரி அருகே மது போதையில் டார்ச்சர் செய்த கணவனை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பள்ளியரா பகுதியை சேர்ந்த தம்பதியினர் குமரன் - சாரதா. இந்த தம்பதியினருக்கு சதானந்தன் என்ற மகனும், சுஜாதா, சுனிதா, பிரியா 3 மகள்களும் உள்ளனர்.
இதில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான குமரன் தினமும் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு மது போதையில் வந்த குமரன் மீண்டும் தனது மனைவியுடன் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சாரதா கத்தியால் கணவனை சரமாரியாக குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குமரன் வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனைவி சாரதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.