மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையில் டார்ச்சர் செய்த கணவன்.. அரிவாளால் துடிதுடிக்க வெட்டிய மனைவி.!
திருச்சி அருகே உள்ள தலைமலை அடிவாரம் ஒத்தரசு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் புஷ்பராஜ் மல்லிகா. எந்த தம்பதியினருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் உள்ளார்.
இதில் மது போதைக்கு அடிமையான புஷ்பராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மல்லிகாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் மது போதையில் வந்த புஷ்பராஜ் மீண்டும் தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மல்லிகா சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து புஷ்பராஜின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மனைவி மல்லிகா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புஷ்பராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த மனைவி மல்லிகாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.