மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிக்க பணம் கேட்டு மிரட்டிய கணவர்... ஆத்திரத்தில் மனைவி செய்த வெறி செயல்!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள ஒழுகூர் கிராமத்தினைச் சேர்ந்தவர் ஏழுமலை - கலைச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்குமே திருமணமாகி வெளியூரில் செட்டில் ஆகியுள்ளனர்.குடி பழக்கத்திற்கு அடிமையான ஏழுமலை அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதே போல் சம்பவத்தினத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு வந்து மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு கலைச்செல்வியை தொந்தரவு செய்துள்ளார். கலைச்செல்வி தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில் ஏழுமலை மனைவியை அடித்தும் தகாத வார்த்தைகளை கூறியும் பணம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி கத்தியை எடுத்து கணவரின் கழுத்தில் சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியான கலைச்செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.