மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓவர் டேக் உயிரை பிரித்த துயரம்.. கணவன் கண்முன்னே மனைவி தலைநசுங்கி உயிரிழப்பு.!
அரசு பேருந்தை முந்தும் போது, இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி மனைவி கீழே விழுந்து, கணவனின் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் வசித்து வருபவர்கள் சுரேஷ்- தனமாலினி தம்பதியினர். இந்த நிலையில், கணவன்-மனைவி இருவரும் இன்று காலை தங்களது ஸ்கூட்டரில் பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது வில்லாபுரம் வெற்றி திரையரங்கம் அருகாமையில் அரசு பேருந்தை இடபுறத்தில் இருந்து சுரேஷ் முந்துவதற்காக முயன்றுள்ளார். தொடர்ந்து பேருந்தை முந்த வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் சற்று வேகமாக அவர் சென்ற போது, முன்னால் சைக்கிளில் சென்ற பெரியவர் மீது மோதாமல் இருப்பதற்காக, பிரேக்கை அழுத்தி இருக்கிறார்.
இதில் ஸ்கூட்டர் நிலைதடுமாறி தனமாலினி கீழே விழுந்த நிலையில், அவரின் தலையில் அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கணவனின் கண்முன்னே தனமாலினி தலை நசுங்கி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
பின் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தனமாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.