ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பட்டப்பகலில், நடுரோட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்.! கம்பி எண்ணவைத்த போலீஸ்.!
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்ட போதிலும் இதுதொடர்பான குற்றங்கள் குறைந்தப்பாடில்லை. இந்தநிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேளச்சேரியை சேர்ந்த வசந்த் எட்வர்ட் என்ற வாலிபர் சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் நாடு ரோட்டில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தனது இருசக்கர வாகனத்தில் ஏறச்சொல்லி கட்டாயப்படுத்யுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக வசந்த் எட்வர்ட் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த் எட்வர்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.