#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆபாச வீடியோவை காட்டி சிறுவனிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஐசிஎப் மைதானத்தில் கால்பந்து பயிற்சி முடித்துவிட்டு தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், சிறுவனை வழிமறித்து செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த அந்த சிறுவன் இளைஞரை தள்ளிவிட்டு விட்டு சைக்கிளில் வேகமாக சென்ற போது மீண்டும் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று சிறுவனை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் திருமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருமங்கலம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அயனாவரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் புற்றுவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.