மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் கணவரின் கண் முன் நடந்த சோகம்... கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயர முடிவு.! ஒருவர் கைது.!
சென்னையில் கலவை சிமெண்ட் லாரி மோதியதில் கணவரின் கண் முன்பு காதல் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தரமணி பெரியார் நகரை சேர்ந்தவர் ரகு(26) இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(25). இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஹேமலதா தற்போது கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை பெரம்பலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக கணவருடன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி இருக்கிறார் ஹேமலதா. அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சிமெண்ட் கலவை இயந்திரம் மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது லாரியின் பின் சக்கரம் ஹேமலதாவின் தலையில் ஏறி இறங்கி இருக்கிறது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் ஆன பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆசாத்(43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.