மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண ஆசை காட்டி இளம் பெண் பாலியல் பலாத்காரம்... கைது செய்யப்பட்ட 23 வயது வாலிபரிடம் காவல்துறை விசாரணை.!
பெரம்பலூர் மாவட்டத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் மகன் தமிழரசன். 23 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி இருக்கிறார். இது தொடர்பாக அந்த பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.
இதனைத் தொடர்ந்து தமிழரசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.