மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: ஜீதமிழ் நடன பிரபலம் 3 பேர் கும்பலால் கடத்தல்?.. கண்ணீர் மல்க மனைவி பரபரப்பு பேட்டி.!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருவர் பிரபலமான நிலையில், அவரின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் கணவரை கடத்திவிட்டதாக மனைவி புகார் அளித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரமேஷ். இவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவரின் நண்பர்கள் என்று கூறிய 3 பேர், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரமேஷை கடத்தி சென்றதாக தெரியவருகிறது. இதனால் காணாமல் போன கணவரை கண்டறிந்து தரக்கூறி, ரமேஷின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து ரமேஷின் மனைவி இன்பவல்லி கண்ணீர் மல்க தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியாவது, "எனது கணவரை கடந்த 11 ஆம் தேதி முதல் காணவில்லை. அவரை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். எனது கணவரை தேடி நானே சென்ற சமயத்தில் 3 பேர் கொண்ட பெண்கள் கும்பல் எங்களை மிரட்டுகிறது.
எனது 3 பெண் பிள்ளைகளை சீரழித்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். எனது கணவர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு செல்ல கூடாது என மிரட்டுகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனது கணவரை மறைத்து வைத்துள்ளார்கள் என்று நினைக்கிறன். அவரின் வளர்ச்சி பலருக்கும் பிடிக்கவில்லை.
நான் பேட்டி கொடுக்க கூடாது என 3 பெண்கள் பெரியமேடு பகுதியில் வைத்து என்னை தாக்கினார்கள். அவர்களின் மீதும் சந்தேகம் இருக்கிறது. எனது கணவர் சாதாரண நிலையில் இருந்தபோது கூட நிம்மதியுடன் இருந்தோம். கணவரின் வளர்ச்சி பலருக்கும் பிடிக்கவில்லை. எங்களின் மகள்கள் வெறும் ஊசி வாங்கி செலுத்தி தற்கொலை செய்யலாம். இந்த உலகம் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
என்ன செய்வது என தெரியவில்லை. பயத்துடன் இருக்கிறோம். மோர் மார்க்கெட் பகுதியில் இருப்பவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். எனது அக்கா மகனின் உதவியுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை பெற்று வருகிறோம். வீட்டை விட்டு வெளியே செல்ல கூட பயமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.