பைக் ஓட்டும் பிள்ளையார், டிராக்டர் ஓட்டும் பிள்ளையார். இது இந்தவருட ஸ்பெஷல்!



New designs of vinayagar status

இந்தியாவில் ஒவொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டபோது வருகிறது. ஒவொரு வருடமும் பலவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த வருடம்  ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்தின் மேன்மைகளை குறிக்கும் வகையில் பெரும்பாலான விநாயகர் சிலைகள் தயாராகி உள்ளன. 

vinayakar

குறிப்பாக ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் விநாயகர், விவசாய பணி முடிந்து, இரு சக்கர வாகனத்தில் அறுவடைக்கு பயன்படுத்தும் அரிவாளுடன், கால் நடைகளுக்கு புல்லுக்கட்டு ஏற்றி செல்லும் விநாயகர், டிராக்டரில் உழவு செய்யும் விநாயகர், தம்பி முருகனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருவிழா வேடிக்கை காட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாராகி உள்ளன.

மேலும் சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் கிழங்கு மாவு, தேங்காய் நார் உள்ளிட்ட மூலப் பொருட்களால் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. இது போன்று விவசாயத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டுள்ள சிலைகளுக்கு விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.