மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல டிசைன்களில் சென்னை சென்ட்ரல் வந்தடைந்த பிள்ளையார் சிலைகள்!
இந்தியாவில் வருடம்தோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக கொண்டப்படுகிறது. இந்தவருடம் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட உள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஏராளமான விநாயகர் சிலைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கடந்தவருடம் பாகுபலி திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாகுபலி பிள்ளையார், ஜல்லிக்கட்டு பிள்ளையார் போன்ற ஏராளமான வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன. இந்தவருடம் என்ன மாதிரியான பிள்ளையார் சிலைகள் வரப்போகிறது என்று மக்கள் ஆவலுடன் காத்துருகின்ற்றனர்.
இந்தவருடம் விவசாயம் அதிக அளவில் பேசப்படுவதால் விவசாயம் செய்யும் பிள்ளையார், ட்ராக்டர் ஓட்டும் பிள்ளையார் என விதத்தித்தமாக பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஏரியாவுக்கு ஏரியா, விநாயகர் சிலைகள் வைப்பதில் போட்டி ஏற்படும். அதன் காரணமாக, சிலைகளின் உயரமும் அதிகரிக்கும். அந்த வகையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென் ட்ரல் ரயில் நிலையத்திற்கு பயணிகள் ரயில் மூலம் பல பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கிருந்து அந்தந்த பகுதிகளுக்கு வேன்கள் மூலமாகவும், டிராக்டர்கள் மூலமாகவும் கொண்டு செல்லப்படயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.