போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி... ஜப்பான் பிரதமர் அறிவிப்பு ...!!



5.5 billion dollar funding for war-torn Ukraine... Japan Prime Minister announced..

ரஷியா உக்ரைன் மீது போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய உள்ளது.

போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பங்கேற்று பேசிய ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ரஷிய படையெடுப்பின் கீழ் உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷிய தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை மீண்டும் கட்டமைக்க அவர்களுக்கு உதவி தேவை. 

எனவே ஜப்பான், உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குகிறது. மேலும் போர் ஓரு வருடத்தை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் 24-ஆம் தேதி ஜி-7 மாநட்டை நடத்த முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.