அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
எலியை பக்குவமாக புல் தரையில் படுக்க வைத்து.., ம்ம்ம்மா..! பூனை அடிக்கும் லூட்டியை பாருங்களேன்.. கியூட் வீடியோ வைரல்.!!
எலிக்கும் பூனைக்கும் ஏழாம்பொருத்தம் என்பார்கள்., ஆனால் அது பசித்தால் மட்டுமே. மீதமுள்ள நேரத்தில் இரண்டும் அடிக்கும் லூட்டி தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
கிராமங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் போன்றவை வளர்க்கப்படும். இதில், பூனை வீட்டில் உள்ள எலிகளை வேட்டையாடி பெரும்பாலும் சாப்பிடும். எலிகள் ஏதும் கிடைக்காத பட்சத்தில், வீடுகளில் வைக்கப்படும் உணவுகளை சாப்பிடும்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பூனையொன்று எலியுடன் கட்டிஉருண்டு அன்பு சண்டை இடுகிறது. இதனைக்கண்டவர் வீடியோ எடுத்து உங்கள் வீட்டு தோட்டத்தில் எலியை பிடிக்க பூனை வேண்டுமா? என கலாய்க்கும் வகையில் பகிர்ந்துள்ளார்.
எலியும் - பூனையும் அன்பை பரஸ்பரம் பரிமாறி, முத்தங்களை பொழிந்து விளையாடுவது காதல் ஜோடி கொஞ்சி குலாவுவது போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.