மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளியில் மீண்டும் நடக்கவிருந்த கொடூரம்... துப்பாக்கியுடன் சுற்றிய நபரை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர்..!
தொடக்கப்பள்ளியில் கையில் துப்பாக்கியுடன் சுற்றத்திரிந்த இளைஞரை சுற்றிவளைத்து காவல்துறையினர் போட்டுத்தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே 25-ம் தேதி தொடக்க பள்ளிக்குள் புகுந்த 18 வயது இளைஞர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேரை கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த பரபரப்பான செய்தியில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஒரு தொடக்கப்பள்ளியில் இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார்.
இதன் காரணமாக அப்பகுதிகளில் இருந்த 3 தொடக்கப்பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியுடன் நடமாடிய மர்ம நபரை சுற்றி வளைத்துள்ளனர்.
பின் அவரிடம் எந்த வித கேள்விகளும் கேட்காமல் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.