மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விந்தணு தரம் குறைவு; ஆய்வில் ஆண்களை அதிரவைக்கும் உண்மை அம்பலம்.!
சீனாவில் தொடங்கி உலகளவில் பரவிய கொரோனா வைரஸ், பலமுறை உருமாறி உலக நாடுகளை பதறவைத்துவிட்டது. தற்போது மீண்டும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பரவல் வேகமெடுத்துவிட்டது. இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுவை ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள், 19 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் விந்தணு மாதிரிகளை சேகரித்தனர். அதன் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தொற்று ஏற்பட்டதும் விஐந்தனுவில் பாதிப்பு இல்லை என்றாலும், விந்தணுவின் தரம் குறைந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
சில மாதங்களில் விந்தணுவின் எண்ணிக்கை, வடிவம், இயக்கம் போன்ற முக்கிய காரணிகளில் பாதிப்பு ஏற்படுவதும் அம்பலமாகியுள்ளது. விந்தணுவின் தள்ளல், தடிமன், உயிர்சக்தி போன்ற இயக்கங்களும் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தங்களின் உடல் நலத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.