#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலகத்தில் உருவாக்கப்பட்ட முதல் நூலகத்தைப் பற்றிய அறிய தகவல் இதோ உங்களுக்காக..!!
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் கி.மு. 300-ல், "த ராயல் லைப்ரரி ஆஃப் அலக்சாண்ரியா" என்ற பெயரில் ஏழு லச்சதிற்க்கும் அதிகமான பாப்பிரஸ் தாள்களை கொண்ட முதல் பொது நூலகம் அமைக்கப்பட்டது.
இந்த நூலகம் பழங்காலத்தின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய நூலகமாக இருந்தது. இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மாசிடோனியாவின் தளபதியும் அலெக்சாந்தரின் வாரிசுமான முதலாம் தாலமி சோத்தர் என்பவரால் இந்த நூலகம் உருவாக்கப்பட்டது. நூலகத்தில் பெரும்பாலான புத்தகங்கள் பாப்பிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்த நூலகத்தில் இருந்த நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிந்து போனதாக கூறப்படுகின்றது. இந்த நூலகத்தின் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது. தோராயமாக, இங்கிருந்த நூல்களின் எண்ணிக்கை 40,000 முதல் 400,000 வரை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.