திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேர்தல் மோசடியில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் கைது!!
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை மாற்றிய அமைக்க முயற்சி செய்ததாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்ஜியாவின் தேர்தல் மோசடி வழக்கில் 13 குற்ற செயல்கள் செய்ததாக குற்றத்தை டிரம்ப் எதிர்கொண்டுள்ளார். மேலும் 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு சுமத்தப்பட்டிருந்தது.
2 லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சில நிமிடங்களில் டிரம்ப்பை பிணையில் விடுவித்துள்ளனர்.
இது குறித்த டிரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் 'இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் வழக்கு போடுவது எல்லாம் அரசியலில் உள்நோக்கம் என்று தெரிவித்திருந்தார்.