திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஷியாவை துண்டுதுண்டாக்கியிருக்க வேண்டாம்.. எல்லாம் ஊமைகள் - டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்.!
சோவியத் யூனியனுடன் உக்ரைனை இணைக்க, அந்நாட்டின் மீது ரஷியா போர்தொடுத்து சென்றுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து பிறந்து தனி நாடாக உருவெடுத்த உக்ரைனை ரஷியா மீண்டும் கைப்பற்ற முனைவதால் உலக அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. உக்ரைன் - ரஷிய படைகள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் நிலையில், உக்ரைன் அதிபர் உலக நாடுகளிடம் உதவி கேட்டார்.
நேரிடையாக இராணுவத்தை களத்தில் இறக்கினால் போர் வேறு பாதைக்கு சென்றுவிடும் என்பதால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் படைகள் உக்ரைன் - ஐரோப்பிய எல்லையில் முகாமிட்டுள்ளது. உக்ரைன் நாட்டுக்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள பிராந்திய நாடுகளின் மூலமாக இராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பொருளாதார ரீதியான உதவி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷியா உக்ரைனின் மீது நேரடியாக படையெடுத்ததால், அந்நாட்டின் மீது பல்வேறு தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளது. இதில், இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மட்டுமே இருநாடுகளும் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று கூறி ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்க மறுப்பு தெரிவித்தது.
ரஷியாவின் தாக்குதலுக்கு உலகநாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தாலும், இராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசி இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம், ஒர்லாண்டோ நகரில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், "தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் இருந்தால், இதனைப்போன்ற பேரழிவுகளை தடுத்து இருக்கலாம் அல்லது அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ரஷியாவை துண்டு துண்டாக பிரித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் உளவியல் தாக்குதல் நடத்தி, சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்காமல் நேட்டோ நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது புத்திசாலித்தனம் ஆகாது. ரஷிய அதிபர் புதின் புத்திசாலி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் புத்திசாலியே. உண்மையான பிரச்சனை நம் தலைவர்கள் ஊமையாக இருப்பதே" என்று தெரிவித்தார்.