தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி 8 உயிர்களை காவு வாங்கிய பரிதாபம்.. பதறவைக்கும் சோகம்..!
ஓட்டுநர் உரிமம் பெறாத 19 வயது இளைஞர், ரிக்க்ஷா ஓட்டி சென்று நீர் பாசன கால்வாயில் கவிழ்த்து விபத்துக்குள்ளாகியதில், 8 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளனர்.
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிலிருந்து, பெஹைரா மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுடன் ரிக்க்ஷா ஒன்று சென்றுள்ளது
அப்போது நைல்ஆற்றின் டெல்டா பகுதியில் உள்ள நீர் பாசன கால்வாய் மூலமாக ரிக்க்ஷா சென்று கொண்டிருக்கும்போது, திடீரென கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் ரிக்க்ஷாவில் இருந்த 12 பேரில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியவர, அவர்கள் விசாரித்த நிலையில், ரிக்க்ஷா ஓட்டுநரான 19 வயது இளைஞர் சரியாக பராமரிக்கப்படாத ரிக்க்ஷாவை இயக்கியுள்ளார் என தெரியவந்தது
மேலும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், இளைஞரின் மீது மனித படுகொலைக்கான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.