மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆப்பிள் ஆப் ஸ்டோர் தலைமை செயல் அதிகாரி சந்தித்து பேசிய எலன் மஸ்க்... என்ன நடந்தது..!!
எலன் மஸ்க், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை நேற்று முன்தினம் சந்தித்துப்பேசினார்.
அமெரிக்க கோடீசுவர தொழில் அதிபர் எலன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். இதை தொடர்ந்து, ஆப்பிள் நிர்வாகி பில் ஷில்லர், டுவிட்டரை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நீக்கப்போவதாக ஆப்பிள் நிறுவனம், கடந்த திங்கட்கிழமை கூறியது.
இது நடந்து விடடால், டுவிட்டரை உபயோகிப்பதில் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் எழும். இதுகுறித்து கருத்து தெரிவித்த டுவிட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க், ஆப்பிளோ, கூகுளோ தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நீக்கினால், புதிய ஸ்மார்ட் போனை உருவாக்குவேன் என்று தடாலடியாக அறிவித்தார். இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து எலன் மஸ்க் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து எலன் மஸ்க் கூறும்போது, நாங்கள் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களிடையே இருந்த தவறான புரிதல்கள் சரிசெய்யப்பட்டன. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நீக்குவது குறித்து அவர்கள் பரிசீலிக்கவில்லை என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டர் நீக்கம் என்பது நடக்காது என தெரிய வந்துள்ளது.