மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNewS: 41 பில்லியன் டாலர் செலவில் ட்விட்டரை முழுவதுமாக வாங்க எலான் மஸ்க் திட்டம்.. மாஸ்டர் பிளான்.!
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 41 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்துள்ளார்.
உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட செயலியாக உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக எலான் மஸ்க் நியமிக்கப்படலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால், இவை எலான் மஸ்க் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டன.
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 41 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்தமாக வாங்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவன இயக்குனர் குழுவில் இணைய மறுப்பு தெரிவித்த எலான் மஸ்க், அதனை முழுவதும் கைப்பற்ற தேவையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
கடந்த 2009 ஆம் வருடம் ட்விட்டரில் கணக்கு தொடங்கிய எலான் மஸ்க்கை 80 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அதன் வாயிலாக அவர் தனது பொருட்களை விளம்பரம் செய்ய தொடங்கினார். இந்த நிலையில், அவர் ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.