அகதிகள் முகாமை குறிவைத்து வான்வழி தாக்குதல்.. அப்பாவி பொதுமக்கள் 59 பேர் பலி.!
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள எத்தியோப்பியாவில் அரசுக்கும் - டைகிரே பிராந்திய மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி படைக்கும் இடையே கடந்த ஒருவருடமாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. டைகிரே பிராந்தியத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.
அரசு படையினர் சார்பில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை நோக்கி படையெடுத்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டைகிரே பிராந்தியத்தின் மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் இராணுவத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்தாலும், இவ்வாறான தாக்குதலில் அப்பாவி மக்களே பெரும்பாலும் பலியாகி வருகின்றனர். போரினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள், உள்நாட்டிலேயே அகதியாக வாழ்ந்து வருகின்றனர். டைகிரே நகரில் உள்ள பள்ளியில், வீடுகளை இழந்த மக்கள் அகதிகளாக தங்கி இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய அரசு படைகள், அகதிகள் முகமாக செயல்பட்டு வந்த பள்ளிக்கட்டிடத்தை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 56 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் குறித்து எத்தியோப்பிய இராணுவம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.