மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏரியில் விமானம் விழுந்து விபத்து... பயத்தில் பயணிகள் மரண ஓலம்... 19 பேர் பலி...!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் இந்திய பெருங்கடல் கடற்கரைப் பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரம் டார்க் எஸ் சலாம். நேற்று காலை இந்த நகரில் இருந்து புகோபாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. தான்சானியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சிறிய ரக விமானத்தில் 43 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டது.
இந்த சிறிய ரக விமானம் புகோபா நகரை நெருங்கிய போது மோசமான வானிலை காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும் விமானி விமானத்தை கட்டுக்குள்
கொண்டுவர பல முயற்சிகளை மேற்கொண்டு அவசர அவசரமாக தரையிறக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் அவரது கட்டுக்குள் வராத விமானம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு சிலரே உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து எஞ்சி இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்
என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.