திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"மூன்றாம் உலகப்போரை நானே தடுப்பேன்" - பைபிளை மேற்கோளிட்டு டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு.!
அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் நகரில் நடைபெற்ற CWA 2023 உச்சி மாநாட்டில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, அவர் 2024 அமெரிக்க பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது நிலைப்பாடு தொடர்பான தகவலையும் கூறி உரையை முன்னெடுத்தார். \
President Donald Trump: "I'll be your peacemaker and I am the only candidate who can make this promise to you, I will prevent World War 3." pic.twitter.com/fupWSZMyBS
— MAGA War Room (@MAGAIncWarRoom) September 16, 2023
அவர் பேசுகையில், "பைபிள் அமைதியானவர்களை ஆசிர்வதிக்கும். நான் அமைதியை உருவாக்குகிறேன். சிரியா மற்றும் ஈராக் போர்களில் இருந்து அமெரிக்காவை விடுவித்தேன்.
இஸ்ரேலில் அமைதியை நான் நிலைநாட்டினேன். நான் உங்களின் அமைதியை உருவாக்குபவன். நான் அந்த வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். நான் மட்டுமே மூன்றாம் உலக போரை தடுப்பேன்" என தெரிவித்தார்.