ஒருமுறை ஓகே! இரண்டாவது முறைக்கு முயன்ற காதலர் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்த காதலி



Girl accused boyfriend for raping

உலகத்தில் நாள்தோறும் பலவிதமான கற்பழிப்பு வழக்குகள் ஒவ்வொரு நாடுகளிலும் பதிவு செய்யப்படுகின்றன. ஒருவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தால் மட்டுமே கற்பழிப்பு என்பது இல்லை. 

மாறாக இந்த கற்பழிப்பிற்கான விளக்கம் ஒவ்வொரு நாட்டின் சட்டத்திற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஒரு நபர் ஒரு பெண்ணை கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என வாக்குறுதி கொடுத்து உடலுறவு செய்துவிட்டு பின்னர் திருமணம் செய்யவில்லை என்றால் அதுவும் கற்பழிப்பு என கருதப்படுகிறது. 

Rape case

இவ்வாறு வற்புறுத்தலின் பேரில் உடலுறவு கொண்டால் தான் கற்பழிப்பு என்றாகிவிடாது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் பெண் ஒருவர் தனது காதலர் மீது கற்பழிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். 

அந்த வழக்கின்படி, அந்த பெண் தன் காதலர் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் மது அருந்திவிட்டு முதல்முறை உற்சாகத்தை அனுபவித்துள்ளனர். காதலருக்கோ மீண்டும் இரண்டாவது முறை உற்சாகத்தை அனுபவிக்க வேண்டும் என தோன்றியுள்ளது. இதற்கு அந்த பெண் மறுக்கவே காதலர் பெண்ணை மிகவும் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். 

Rape case

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மறுநாள் காலையே தன் காதலர் மீது காவல் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கை தொடர்ந்தார். பிறகு பேச்சுவார்த்தையில் ஈடுபட அந்த பெண் வழக்கை விலக்கிகொண்டார். இதனால் மணமுடைந்த காதலர் இனி அந்த பெண்ணுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.