தகுந்த நேரத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்- பாக்.பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை.!



india attack pakistan prime minister imrankhan

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 அளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது. இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

India

இந்த பயங்கர தாக்குதலில், சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் சரியான நேரத்தில் தகுந்த இடத்தில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

India

இந்தியாவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் இது குறித்து உலக நாடுகளிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.